சிகிச்சை பெற்று திரும்பிய மீனவர்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சந்தித்து நலம் விசாரித்த காட்சி.
விளாத்திகுளம் அருகே படகு கவிழ்ந்து விபத்து- சிகிச்சை பெற்று திரும்பிய மீனவர்களை சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ.
- கடந்த 11-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் கீழவைப்பார் கிராமத்தை சேர்ந்த ஜெனிபர், ஆரோக்கியம், எக்லிண்டன், திருமூர்த்தி ஆகியோர் கடந்த 11-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக படகு விபத்துக்குள்ளாகியது. பின்னர் அவர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவர்களை, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதி உதவி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான், ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் ராஜ், கிளைச் செயலாளர்கள் சூசைபூபாலராயர், ரீகன், வில்லியம் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.