உள்ளூர் செய்திகள்
மஞ்சூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம் வழங்கப்பட்டது.
- குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், கீழ்குந்தா செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம், பேனாக்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், செயல் வீரர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டர்.