உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி

Published On 2022-09-09 10:27 GMT   |   Update On 2022-09-09 10:27 GMT
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.
  • போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும்.

சேலம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 15 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆவின் பாலகம் முதல் அணைமேடு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது.

மாணவிகளுக்கு 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி ஸ்டீல் பிளாண்ட் வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 10 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு ஆவின் பாலகம் முதல் கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரூ.250-ம் பரிசு வழங்கப்படும். இந்த பரிசுகள் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

Tags:    

Similar News