உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

அவினாசி காசி விநாயகர் கோவில் திருப்பணிக்காக பாலாலய பூஜை

Published On 2022-06-15 06:52 GMT   |   Update On 2022-06-15 06:52 GMT
  • கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது.
  • விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

அவிநாசி :

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின், உப கோவிலாக, கிழக்கு ரத வீதியில் காசி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடந்து 29 ஆண்டு ஆகி விட்டது. இதனால்கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.

அதற்காக கோவிலில் கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவ மூர்த்திக்கு பாலாலயம் செய்யப்பட்டு, வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது.கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, விரைவில் கும்பாபிேஷகம் செய்யப்படுமெனஅறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News