உள்ளூர் செய்திகள்
பாகலூர், பேரிகையில் 2 தொழிலாளிகள் மாயம்
- வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு சென்ற சதீஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சதீஷை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள பெருமாள்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவரது மகன் சதீஷ் (வயது 23). கூலி தொழிலாளி. கடந்த 5-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு சென்ற சதீஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சதீஷின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சதீஷை தேடி வருகின்றனர்.
இதேபோல் பேரிகை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆதேஷ் (18) என்ற கூலி தொழிலாளி கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கவுரப்பா கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆதேசை தேடி வருகின்றனர்.