கோவையில் ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலா
- அன்னை சத்யா அரசு காப்பகத்தில் இருந்து 43 மாணவர்கள் பங்கேற்பு
- நீலகிரி பயோஸ்பியர் எக்கோ பார்க், சலீம் அலி பறவையியல் மையத்தை சுற்றி பார்த்தனர்
கோவை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழா வையொட்டி, ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வுச் சுற்றுலா நடைபெற்றது.
ேகாவை மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு சுற்றுலா வாகனம் காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
சுற்றுலாப் பஸ்சை மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மதியழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த சுற்றுலாவில் அன்னை சத்யா ஆதரவற்ற அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 43 மாண வர்கள், 10 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் அனைவரையும் ஆனைகட்டிக்கு அருகே உள்ள நீலகிரி பயோஸ்பியர் எக்கோ பார்க், சலீம் அலி பறவையியல் இயற்கை வரலாற்று மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள பூங்காக்கள், அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை கண்டுக ளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி சுற்றுலா அலுவலர் துர்கா தேவி, ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் பாலசுப்பிரமணியம், சுற்றுலாத் துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.