உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கானா பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் நகராட்சி சார்பில் தூய்மை பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-06-27 07:26 GMT   |   Update On 2022-06-27 07:26 GMT
  • கள்ளக்குறிச்சியில் நகராட்சி சார்பில் தூய்மை பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.
  • நகராட்சி சார்பில் வீடுதோறும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் என்குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் சுப்பராயலு தலைமை தாங்கினார். நகராட்சிதுணை தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகர் 1-வது தெரு, விளாந்தாங்கல் ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, 4 முனை சந்திப்பு பகுதி, ஏமப்பேர் பஸ் நிறுத்தம் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதியான நான்கு முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கானா பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக நகராட்சி சார்பில் வீடுதோறும் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி கலைச்செல்வன், மீனாட்சி கேசவன், பாத்திமா அபூபக்கர், உமா வெங்கடேசன், நகராட்சி பொறியாளர் முருகன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சையத்காதர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News