உள்ளூர் செய்திகள்

விழிப்பணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.

கீழநத்தம் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2023-05-11 14:54 IST   |   Update On 2023-05-11 14:54:00 IST
  • கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • இதில் தூய்மை காவலர்களோடு பொதுமக்கள் இணைந்து குப்பைகளை அகற்றினர்.

நெல்லை:

பாளை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவி முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தூய்மை காவலர்களோடு பொதுமக்கள் இணைந்து குப்பைகளை அகற்றினர். மேலும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) பொன்ராஜ், பாளை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணமணியன், யூனியன் பொறியாளர் பிரவீன், மேற்பார்வையாளர் முருகன், மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுதா, பணித்தள பொறுப்பாளர் சோபனா, திட்ட மேற்பார்வையாளர் மாரியம்மாள், வார்டு உறுப்பினர்கள் ஸ்ரீலதா, பரமசிவன் சுரேஷ், பாரதி, ஊராட்சி செயலர் சுபாஷ், அரசு ஒப்பந்ததாரர்கள் மணிகண்டன், பால்துரை, வடக்கூர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News