உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்த்தல் குறித்து நாமகிரிபேட்டை வட்டார வள மையத்தின் சார்பில் பேரணி நடந்த போது எடுத்த படம்.
வட்டார வள மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
- நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது.
ராசிபுரம்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சென்பக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ -மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், இயன்முறை டாக்டர் சுஷ்மிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.