உள்ளூர் செய்திகள்

கூட்டடா எஸ்டேட்டில் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு

Published On 2022-12-28 14:38 IST   |   Update On 2022-12-28 14:38:00 IST
  • போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • போதை பழக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் கூட்டடா கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு போதை பொருள் மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும் போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News