உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே தூக்கு போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை
- சண்முகம் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
- நேற்று நள்ளிரவு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சண்முகம் (45). ஆட்டோ டிரைவர். இவர், கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் அவர் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டுக்கு செல்லாமல் அந்த பகுதியிலேயே படுத்து உறங்குவார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.