உள்ளூர் செய்திகள்

கோவையில் வீட்டில் திருட நோட்டம்; 5 பேர் கைது

Published On 2023-10-26 14:58 IST   |   Update On 2023-10-26 14:58:00 IST
  • திருமண மண்டபத்தின் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் நின்றிருந்தது.
  • 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை

கோவை செல்வபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் நின்றிருந்தது.

போலீசார் அவர்களின் அருகே சென்ற போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டினர். போலீசார் துரிதமாக செயல்பட்டு 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் செல்வபுரம், கல்லாமேட்டை சேர்ந்த அலாவுதீன் (25), கரும்புகடையை சேர்ந்த முகமது யாசின் (22), செல்வபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் கான்(25), அப்துல் சபீர் (23), அப்பாஸ்(24) என்பதும், செல்வபுரம் சாவித்திரி நகரில் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டம் விட்டு திருட ரகசிய திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News