தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளுவர் தினத்தில் அய்யனின் புகழைப் போற்றி வணங்குவோம்- நயினார் நாகேந்திரன்

Published On 2026-01-16 08:31 IST   |   Update On 2026-01-16 08:31:00 IST
  • ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.
  • தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை...!

சென்னை :

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்"

என்று தொடங்கி...

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழையும் தமிழ் மொழியின் தொன்மையையும் போற்றுவதோடு, தமிழ் மொழி நம் பாரத தேசத்தின் முதன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று, வரலாற்றில் முன்பு யாரும் செய்யாத அளப்பரிய காரியங்களை தமிழ் மொழிக்காக செய்து வருபவர்.

"உலகப் பொதுமறையாம் திருக்குறளை" மேலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்ததோடு நின்றுவிடாமல், வடமாநில பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழி கற்பதின் அவசியத்தை உணர்த்தியவர். இதற்குச் சான்றாக தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான வாரணாசியில் "காசி தமிழ் சங்கமம்" நிகழ்வில் ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை...!

திருவள்ளுவர் தினத்தில் அய்யனின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News