தமிழ்நாடு செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2026-01-16 07:54 IST   |   Update On 2026-01-16 07:55:00 IST
  • பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
  • அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. காளைகளுக்கு காயம், நோய், உடல்நலக்குறைவு உள்ளதா என மருத்துவ குழு பரிசோதனை நடத்தியது. மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

Tags:    

Similar News