உள்ளூர் செய்திகள்
தச்சநல்லூரில் தொழிலாளி மீது தாக்குதல்
- கங்கைராஜிக்கும், தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
- தர்மராஜ் உருட்டு கட்டையால் கங்கை ராஜை சரமாரியாக தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார்.
நெல்லை:
தச்சநல்லூர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் கங்கைராஜ் (வயது 40), தொழிலாளி.
2 ஆண்டுகளுக்கு முன்னர் தசராவின் போது வீட்டு முற்றத்தில் தேர் நிற்க வைப்பது தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (48) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக அவர் களுக்குள் மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் உருட்டு கட்டையால் கங்கை ராஜை சரமாரியாக தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார்.
இதில் படுகாயமடைந்த கங்கைராஜை அவரது உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான தர்மராஜை தேடி வருகின்றனர்.