உள்ளூர் செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் - சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

Update: 2023-05-27 10:48 GMT
  • கரூரில் வருமான வரி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில்

9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News