களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்
- அல்லாபிச்சை களக்காடு சென்று விட்டு பின்னர் ஊருக்கு மினி பஸ்சில் திரும்பினார்.
- சங்கர் என்ற சன்னியாசி, அல்லாபிச்சையை மது அருந்த அழைத்துள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு கள்ளிகுளம், நடுத்தெருவை சேர்ந்தவர் அல்லாபிச்சை (45). விவசாயி.
சம்பவத்தன்று இவர் களக்காடு சென்று விட்டு பின்னர் ஊருக்கு மினி பஸ்சில் திரும்பினார். சத்திரங்கள்ளிகுளத்தில் மினி பஸ்சில் இருந்து இறங்கி வடக்கு கள்ளிகுளத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பேச்சி மகன் சங்கர் என்ற சன்னியாசி, அவரை மது அருந்த வருமாறு அழைத்தார். அதற்கு அல்லாபிச்சை தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மது அருந்த வர முடியாது என்று மறுத்தார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், அல்லாபிச்சையை மது பாட்டிலாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு கை விரல்கள், நெற்றி, காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்களும் சிதைந்தது.
மேலும் அவர் வைத்தி ருந்த ரூ.2 ஆயிரத்தையும் சங்கர் பறித்து சென்று விட்டார். இதையடுத்து படுகாயமடைந்த அல்லா பிச்சை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கரை தேடி வருகின்றனர்.