உள்ளூர் செய்திகள்

திரளாக கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம். உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மகா முனியப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஊத்தங்கரையில் மகா முனியப்பன் கோவில் திருவிழா

Published On 2022-08-10 09:02 GMT   |   Update On 2022-08-10 09:02 GMT
  • மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
  • பக்தர்கள் கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் 80 ஆண்டு பழமையான ஸ்ரீமகா முனியப்பன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான கோழி, ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

செவ்வாய்கிழமை அதிகாலை ஸ்ரீ விநாயகர், மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இவ்விழா கோவில் தர்மகர்த்தா சிவசக்தி சண்முகம், கொங்கு அறக்கட்டளை தலைவர், கொங்கு அறக்கட்டளை செயலாளர், பொருளாளர் கொங்கு இளைஞரணி தலைவர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொங்கு இளைஞர்அணி மற்றும் ஸ்ரீமகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளையினர் செய்தி ருந்தனர். ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலஅட்வின் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News