உள்ளூர் செய்திகள்

விருது வழங்கப்பட்ட காட்சி.

ஓசூரில் நடந்த மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞருக்கு பாராட்டு

Published On 2022-07-25 14:59 IST   |   Update On 2022-07-25 14:59:00 IST
  • முப்பெரும் விழா ஓசூரில் நடைபெற்றது.
  • விழாவிற்கு, ஓசூர் நாராயண தாதா ஆசிரம நிறுவனர் வெங்கடேஸ்வரா சுவாமிஜி தலைமை தாங்கினார்.

ஓசூர்,

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் மாவட்ட மாநாடு, கல்வி பரிசளிப்பு உள்ள முப்பெரும் விழா ஓசூரில் நடைபெற்றது.

ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, ஓசூர் நாராயண தாதா ஆசிரம நிறுவனர் வெங்கடேஸ்வரா சுவாமிஜி தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் வக்கீல் முருகேசன் மாநில இணை செயலா ளர்சுந்தர்ராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓசூர் வட்ட தலைவர் தேவேந்திரன் என்ற குட்டி வரவேற்றார். இதில், சங்கத்தின் மாநில தலைவரும்,மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைவருமான சேம. நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.

மேலும் ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்வாசுதேவன், ஓசூர் அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியின் இயக்குனர் பாலசுப்பிரமணியன், வக்கீல் ராம்பிரகாஷ் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்.

விழாவின்போது பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட சிற்பக்கலைஞர் முனுசாமியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

மேலும், 10- ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்டூவில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், விழாவையொட்டி நடந்த வினாடி வினா நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குலாலர் சங்க நிர்வாகிகள், குலால சமுதாயத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

முடிவில், ஓசூர் வட்ட செயலாளர் ராமஜோதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News