உள்ளூர் செய்திகள்
சாலிநாயனப்பள்ளியில் முனீஸ்வர சுவாமி கோவிலின் 34-ம் ஆண்டு திருவிழா
- சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சாலிநாயனப்பள்ளி முனீஸ்வர சுவாமி கோவிலின் 34-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று சாமிக்கு அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள், ஆராதனை, பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தெருக்கூத்து, சாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. முனீஸ்வரர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாலிநாயன பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.