உள்ளூர் செய்திகள்

நாகையில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

நாகையில், தொல்லியல் குழுவினர் ஆய்வு

Published On 2023-05-07 09:39 GMT   |   Update On 2023-05-07 09:39 GMT
  • அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாள சின்னமாக மாற்றப்படும்.

நாகப்பட்டினம்:

கீழடியில் அகழாய்வு செய்து தமிழர் நாகரிகத்தை வெளிக்கொண்டு வந்த, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான ஆய்வுக் குழுவினர், நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம், 115 ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், பழைய கோட்டாட்சியர் அலுவலகம், நாகை அருங்காட்சியகம், டச்சுக் கல்லறை உள்ளிட்ட பல தொன்மையான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வரவேற்றார்.நாகப்பட்டினம் துறைமுக நகரத்தின் வரலாற்று பண்பாட்டுத் தடங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த ஆய்வுப் பயணம் அமைந்துள்ளது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

நாகப்பட்டினத்தில் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த புத்த சிற்பங்களை மீட்டு நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பது, சூடாமணி விகாரம் பகுதியை நாகையின் அடையாளச் சின்னமாக மாற்றி, கீழடி போல் மக்கள் பார்வைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆய்வுப் பயணம் வலுசேர்க்கும் என்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

Tags:    

Similar News