உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத பெண்-முதியவர் உடல்கள் மீட்பு

Published On 2022-12-04 14:50 IST   |   Update On 2022-12-04 14:50:00 IST
  • அடையாளம் தெரியாத பெண் உடலை ஹட்கோ போலீசார் கைப்பற்றி ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
  • காவேரிப்பட்டனம் போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் ஹட்கோ அருகேயுள்ள தென்னசந்திரம் கிராம நிர்வாக அதிகாரி முருகன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கெலவரப்பள்ளி டேம் பகுதியில் நீரில் மூழ்கி இறந்து கிடந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடலை ஹட்கோ போலீசார் கைப்பற்றி ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதேபோல காவேரிபட்டணம் அருகேயுள்ள சுண்டே குப்பம் கிராம நிர்வாக அதிகாரி சரண்யா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சுண்டே குப்பம் கிருஷ்ண கோவில் அருகே வாகனம் மோதி இறந்து கிடந்த 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் உடலை காவேரிப்பட்டனம் போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News