உள்ளூர் செய்திகள்

பர்கூர் அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

Published On 2022-08-12 14:28 IST   |   Update On 2022-08-12 14:28:00 IST
  • ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைகளை நீட்டி போதை பொருளுக்கு எதிராக தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி பிரசாரத்தை ஏற்றுக் கொண்டனர்.
  • போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மதியழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பர்கூர்மதியழகன்

எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிரமிளா முன்னிலை வகித்தார்.

இதில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து போதை பொருள் தடுப்பு உறுதிமொழியை படித்தார்.

அதை பின்பற்றி மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைகளை நீட்டி போதை பொருளுக்கு எதிராக தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி பிரசாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து போதை பொருள் தடுப்பு அதன் தீமைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள், போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மதியழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் பர்கூர் நகர செயலாளர் பாலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News