உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தையில் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார்.

உழவர் சந்தையில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு

Published On 2022-07-21 10:03 GMT   |   Update On 2022-07-21 10:06 GMT
  • விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
  • விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள், கீரைகள், பழங்களின் தரத்தை பார்வையிட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளது. இங்கு பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்ட பலவற்றை விற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த உழவர் சந்தையை தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார். உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்ப ட்டது. விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் காய்கறி,பயிர் முகாம் நடத்திவிநியோ கிக்க ப்பட்டதுஇந்த ஆய்வின்போது பட்டுகோ ட்க்கடை தோட்ட க்கலை உதவி இயக்குனர் ராகினி, உழவர் சந்தை அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News