உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்கள் இசையமைத்த காட்சி.

செங்கோட்டை அரசு பள்ளியில் கலைத்திருவிழா

Published On 2022-11-27 14:38 IST   |   Update On 2022-11-27 14:38:00 IST
  • மேலச் செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.
  • மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.

செங்கோட்டை:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் மேலச் செங்கோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தலைமையாசிரியர் ராஜன், ஆசிரியர் பிரதிநிதிகள் ஜெஸிகலா, வேலம்மாள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இசக்கித்துரைபாண்டியன், சந்திரா ஆகியோர் உள்ளடக்கிய விழாக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு போட்டிகளுக்கான நடுவர்களும் நியமிக்கப்பட்டு பள்ளி அளவில் போட்டிகள் கடந்த 23-ந் தேதி முதல் 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பள்ளி அளவில் இறுதி போட்டி 28-ந் தேதி நடைபெற உள்ளது.

இதில் முதலிடம் பெறுபவர்கள் வட்டார அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். வட்டார அளவில் வெற்றிபெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்வார்கள்.மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்ப டவுள்ளது. தரவரிசையில் முதல் 20 பேர் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

Tags:    

Similar News