உள்ளூர் செய்திகள்

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது

Published On 2022-12-02 14:50 IST   |   Update On 2022-12-02 14:50:00 IST
  • சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
  • 11 ஆம் வகுப்பு படித்து வரும்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் காமராஜ் மகன் வசந்தன் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பழகியுள்ளார்.

பின்னர் அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெயமங்களத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அறிந்த அவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். குழந்தை திருமணம் செய்தது உண்மை என்பதால் அவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வசந்தன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் கொளஞ்சியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து வசந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மீட்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News