உள்ளூர் செய்திகள்

175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-15 09:26 GMT   |   Update On 2022-12-15 09:26 GMT
  • 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
  • மக்கள் தொடர்பு முகாம்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குருவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, பல்வேறு துறைகள் சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.14,22,260 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, இந்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்பொழுது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

தங்களது வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இதன்படி, வீடு, தெரு, கிராமம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்படி பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

இம்முகாமுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் குமார், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News