உள்ளூர் செய்திகள்

கிராமமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

Published On 2022-10-07 09:23 GMT   |   Update On 2022-10-07 09:23 GMT
  • கிராமமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • அடிப்படை வசதி கோரி நடந்தது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தழுதாழைமேடு ஊராட்சிக்கு உட்பட்ட மெய்காவல்புத்தூர் காமராஜர் நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.முன்னதாக பாலமுருகன் வரவேற்று பேசினார். செல்வம், அருள்செல்வி, பிரகாஷ், பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.மகாராஜன், டி. அம்பிகா, மாவட்ட குழு எஸ்.மீனா, பி.பத்மாவதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், குண்டவெளி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட சில கோரிக்கைகளை ஒரு வார காலத்திற்குள்ளும், மற்ற கோரிக்கைகளை படிப்படியாக செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதப் போரட்டத்தை கைவிட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News