உள்ளூர் செய்திகள்

அரியலூரில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-14 12:21 IST   |   Update On 2023-01-14 12:22:00 IST
  • அரியலூரில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • பேரணியில் 100 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்

அரியலூர்:

அரியலூர் நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின்கீழ் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் புகை நமக்கு பகை, புகையில்லா போகி நமக்கு பெருமை என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் 100 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பழைய நகராட்சி அலுவலகத்திலிருந்து, தேரடி, பெருமாள் கோவில் தெரு, சத்திரம் வழியாக மீண்டும் தேரடி, பெருமாள் கோவில் தெரு, பழைய நகராட்சி அலுவலகத்தில் வந்தடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், நகராட்சி கமிஷனர் பொறுப்பு தமயந்தி, நகராட்சி மேற்பார்வையாளர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News