உள்ளூர் செய்திகள்

ஊராட்சி குழு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

Published On 2022-11-25 15:08 IST   |   Update On 2022-11-25 15:08:00 IST
  • ஊராட்சி குழு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி அலுவலக செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, புள்ளியியல் அலுவலர் முகிலன், அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 14 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன, அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்திற்கு புதிய கட்டிட வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும், என தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News