உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2022-12-15 15:12 IST   |   Update On 2022-12-15 15:12:00 IST
  • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
  • பாலியல் வன்கொடுமை வழக்கில்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வகணபதி (22). கூலித் தொழிலாளியான இவர், 12 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெய ங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், செல்வகணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளி க்கப்பட்டது. இதில் குற்றவாளி செல்வக ணபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து செல்வகணபதி திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.

Tags:    

Similar News