உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

Published On 2022-12-10 09:13 GMT   |   Update On 2022-12-10 09:13 GMT
  • போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது
  • 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது

அரியலூர்

மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு, அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-சி கீழ் பிரிவு எழுத்தர் அல்லது இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் போன்ற 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 14-ந்தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News