உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு
- பணியை பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
- அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல் துறை திருச்சி சரக துணை தலைவர் சரவணசுந்தர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். அப்போது காவல் துறை வாகனங்கள், காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரின் பணியை பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.