உள்ளூர் செய்திகள்

இரட்டை கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-12-03 15:06 IST   |   Update On 2022-12-03 15:06:00 IST
  • இரட்டை கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  • கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெரியவளையம் தைலம் மரம் காட்டில் கடந்த அக்.22 ஆம் தேதி காளான் பறிக்கச் சென்ற இரண்டு பெண்களை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையையடுத்து, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.

Tags:    

Similar News