உள்ளூர் செய்திகள்

6 மாதங்களாக செயல்படாத எரிவாயு தகன மேடை

Published On 2022-11-16 09:14 GMT   |   Update On 2022-11-16 09:14 GMT
  • 6 மாதங்களாக எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது
  • சாலையோரம் பிணங்களை எரிப்பதால் அச்சம்

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் பொதுவான வகையில் எரிவாயு மின் தகன மேடை சென்ற ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இங்கு இறந்த நபரை தகனம் செய்ய ரூ.3000 என நகராட்சி மூலம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக இந்த எரிவாயு தகன மேடை செயல்படாமல் உள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள சுடுகாட்டில் பிணங்களை எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அந்த வழியாக சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் புகை மூட்டமாக இருப்பதால் சிரமம் அடைகிறார்கள். மேலும் பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

இந்த சுடுகாட்டின் அருகிலேயே அரசு கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் வகுப்பறையில் பெரும் சிரமத்தை சந்திப்பதாக புகார் தெரிவித்துள்ளதோடு இந்த சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News