உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு

Published On 2022-12-02 14:46 IST   |   Update On 2022-12-02 14:46:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன
  • சிறந்த பள்ளிக்கான அன்பழகன் விருதுக்கு

அரியலூர்:

தமிழகத்தில் சிறந்த பள்ளிக்கான விருதுகள் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 3 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் சிறந்த பள்ளிக்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து சிறந்தப் பள்ளிகளுக்கான விருது பட்டியலை தமிழக பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. இதில் அரியலூர் ஒன்றியத்தில் லிங்கத்தடிமேடு அரசு உதவிப் பெறும் கே.ஆர்.வி.நடுநிலைப் பள்ளி, இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.மேற்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News