போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாசு கட்டுப்பாட்டுத்தின விழா நடந்த காட்சி.
அறிஞர் அண்ணா கல்லூரியில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தின விழா
- தேசிய மாசு கட்டுப்பாட்டுத்தின விழா நேற்று நடைபெற்றது.
- மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாசு கட்டுப்பாட்டுத்தின விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசினார். தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு முன்மாதிரியாக 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார் விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்டீபன் விக்டர் ஆண்டனி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். விழாவின் நிறைவாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார். விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர்கள கலந்து கொண்டனர்.