உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்கள்.

அறிஞர் அண்ணா கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு பிரிவு உபச்சார விழா

Published On 2022-08-12 14:34 IST   |   Update On 2022-08-12 14:34:00 IST
  • அறிவியல் துறை படிப்பதால் மாணவ, மாணவியர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கலாம்.
  • காலத்திற்கு ஏற்ப புதிய மென்பொருள் வன்பொருள்களை கண்ட றிவதில் மாணவர்கள், மாணவியர்கள் சிறந்து விளங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் மாணவி ரோஜா வரவேற்புரையாற்றினார்.

விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் தனபால் தன்னுடைய சிறப்புரையில் கணினி அறிவியல் துறை படிப்பதால் மாணவ, மாணவியர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கலாம்.

குறைவான நேரத்தில் நிறைய தரவுகளை சேமிக்கலாம். முக்கிய கோப்புகளை பாதுகாக்கலாம். காலத்திற்கு ஏற்ப புதிய மென்பொருள் வன்பொருள்களை கண்ட றிவதில் மாணவர்கள், மாணவியர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார்.

விழாவில் கணினி அறிவியல் துறை தலைவி முனைவர் ராஜலட்சுமி கணினித் துறையின் வளர்ச்சியின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவியர்கள் பெறலாம் என்றார்.

இவ்விழாவில் கணினி அறிவியல் துறை பேராசிரியர் முருகதாஸ், வனிதா, செல்வகுமார், ஸ்டீபன் விக்டர் அந்தோணி, லட்சுமி, இலக்கியா, வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் முடிவில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவி புவனேஸ்வரி நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

Tags:    

Similar News