உள்ளூர் செய்திகள்

அன்னதானபட்டியில் மகனுக்கு மொட்டை போடுவதில் தகராறு; பெண் தற்கொலை

Published On 2022-08-03 14:19 IST   |   Update On 2022-08-03 14:19:00 IST
  • மொட்டை போடுவது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
  • மனம் உடைந்த நந்தினி இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால்,தனியார் துணி உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி நந்தினி (வயது 31). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. தற்போது ஸ்ரீ சுதர்சன் என்ற 2 வயது மகன் உள்ளான்.

இந்த நிலையில் சுதர்ச–னுக்கு மொட்டை போடுவது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது .ஆடி மாதம் முடிந்ததும் மொட்டை போடலாம் என தனபால் கூறியுள்ளார். ஆனால் நந்தினி தற்போது மொட்டை போட வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கி–டையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த நந்தினி இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News