உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் திறமையை வெளிப்படுத்தி அசத்திய மாணவர்கள்- ஆ.ராசா எம்.பி பரிசு வழங்கி பாராட்டு

Published On 2023-11-05 08:50 GMT   |   Update On 2023-11-05 08:50 GMT
  • கல்வியுடன் பல்வேறு கலைகளையும் கற்றுத்தர பெற்றோர் கோரிக்கை
  • பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தல்

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் கலைதிருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.

தொடர்ந்து கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஊட்டியில் நடத்தப்பட்டது. இதில் தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் மு. அருணா, ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், ஊட்டி நகர மன்றதலைவர் வானீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக நீலகிரி கலை திருவிழாவுக்கு வந்திருந்த மாணவ-மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:-

மாணவ-மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமையை வெளிப்படுத்த, இந்த கலைவிழா சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மாணவ மாணவியர் மத்தியில் புதைந்துள்ள பல்வேறு திறமைகளை அடையாளம் காண முடியும்.

மேலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க, பள்ளிகளில் பிரத்யேக ஆசிரியர்களை நியமித்து பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமை மேலும் வளரும்; சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் பிள்ளைகளுக்கு திறமைக்குறைவு என்ற மேலோட்டமான பார்வையை இந்த கலைவிழா தவிடுபொடி ஆக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியுடன் பல்வேறு கலைகளையும் பள்ளி நிர்வாகம் கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News