சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- 250 பேர் பங்கேற்ற பேரணி தாழையூத்து மெயின் பஜார் வழியாக சங்கர்நகர் நிறுத்தத்தை வந்து அடைந்தது.
- நிகழ்ச்சியின் போது போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நெல்லை:
போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். அதிகாரிகள், தன்னார்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாக நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்ற பேரணி தாழையூத்து பஸ் நிறுத்தத்தில் இருந்து மெயின் பஜார் வழியாக சங்கர்நகர் நிறுத்தத்தை வந்து அடைந்தது.
பேரணியின் போது தன்னார்வலர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் , கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை என்.எஸ்.எஸ். அலுவலர்கள் செல்வராஜ், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.