உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

Published On 2023-09-18 09:02 GMT   |   Update On 2023-09-18 09:02 GMT
  • கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 24-வது மாத அன்னதான நிகழ்ச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
  • கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 24-வது மாத அன்னதான நிகழ்ச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர்கள் அசோக், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர்கள் கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதன்மை சிறப்பு விருந்தினர்களாக நெல்லை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, உறுப்பினர்கள் நடராஜன், லவராஜா, கதிரேசன், தங்கராஜ், எஸ்.பி. பாண்டியன், சுப்பிரமணியன், முருகன், முத்துமாரியம்மன், மாரிமுத்து, காளிராஜ், செல்வம் மற்றும் ஆசிரியர்கள் ஜீவானந்தம், சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் மூர்த்தி, மிலிட்டரி சந்திரசேகர், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி, பசுமை இயக்க செந்தில், கோவில்பட்டி அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் சுகன்யா, கொல்லம் சேகர், அசோக் மாறன், காளிராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முடிவில் தொழில் அதிபர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News