உள்ளூர் செய்திகள்

திருவாரூரில், அங்கன்வாடி ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

Published On 2023-04-24 10:09 GMT   |   Update On 2023-04-24 10:09 GMT
  • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

திருவாரூர்:

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொறுப்பா ளர்கள் சித்தரா, மாலதி, திரிபுரசுந்தரி மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 26 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரமும் வழங்கிட வேண்டும்.

மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிட வேண்டும்.

அங்கன்வாடி மைய பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ 3 ஆயிரம் தொகையினை பணியாளர்க ளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும். சிலிண்டர் மற்றும் உணவு செலவுகளுக்கான தொகையை முன்பணமாக வழங்கிட வேண்டும்.

சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை பில்லில் உள்ளவாறு முழுமையாக வழங்கிட வேண்டும்.

அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் கருதி அங்கன்வாடிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை காலத்தில் உலர் உணவு பொருட்களாக வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒரு வருடமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

பணியிட மாறுதல் அளித்திட வேண்டும்.

இவைகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போரட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News