புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- முடிகொண்டான் ஆற்றில் புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, அங்குநார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடந்தது.
- வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேம் நடந்தது.
இதையொட்டி முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன.
மேலும் கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமங்கள், கோ பூஜை, தன பூஜை முடிகொண்டான் ஆற்றில் புனித நீர் எடுத்தல், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, அங்குநார்ப்பணம், ரக்ஷாபந்தனம் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாஹதி, கடம் புறப்பாடு நடந்தது.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கோபுர கலசத்திற்குவஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியா ர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்தனர்.