உள்ளூர் செய்திகள்

குள்ளஞ்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை வாலிபர் கைது

Published On 2023-07-18 13:23 IST   |   Update On 2023-07-18 13:23:00 IST
  • குள்ளஞ்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • ஆனந்தன் என்பவர் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியிலிருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் தனது தாயை ஒருவர் அடிப்பதாக புகார் செய்தார். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். அப்போது ஆனந்தன் என்பவர் போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரிய வந்தது. ஆனந்தன் சகோதரர் கலையரசன் குடிபோதையில் இருந்தார். இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் , கலையரசனை காலையில் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து விட்டு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த கலையரசன் மோட்டார் சைக்கிளில் சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்தை பணி செய்ய விடாமல் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கலையரசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News