உள்ளூர் செய்திகள்

3 வயது குறைந்த வாலிபரை திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவி

Published On 2022-11-17 15:17 IST   |   Update On 2022-11-17 15:17:00 IST
  • பாதுகாப்பு கேட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
  • மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென் செங்கம்பாளையத்தை சேர்ந்த 19 வயது வாலிபர். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது என்ஜினியரிங் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றொருக்கு தெரியவந்தது. அவர்கள் தங்களது மகள் தன்னைவிட 3 வயது குறைந்த வாலிபரை காதலிப்பதை எதிர்த்தனர்மேலும், வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.

இதனால், 2 பேரும் கடந்த 4-ந்தேதி விட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்கள் பாதுகாப்பு கேட்டு கோட்டூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News