உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் பேசினார்.

முத்துப்பேட்டையில், சைக்கிள் பயணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-03-13 09:47 GMT   |   Update On 2023-03-13 09:47 GMT
  • சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை.
  • சைக்கிளில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மிதிவண்டி பயணம் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதற்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார்.

பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம் வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் உடல்நலம் சார்ந்த பிரசாரத்தோடு 20 ஆயிரம் கி.மீ. தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மாணவர்களுக்கு உடல் நலன், சுற்றுச்சூழல் நலன், மிதிவண்டியில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் மற்றும் மிதிவண்டி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இதில் கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், வட்டார வளமைய பயிற்றுனர்கள் ஸ்ரீதர், சுரேஷ், ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முத்துலட்சுமி, இந்திரா, அமிர்தம், பெல்சி ராணி, வனிதா, செல்வக்குமார், சங்கீதா, விதைக்கும் கரங்கள் நந்தா ஜீவானந்தம், கலாம் கனவு இயக்க பொருளாளர் கிஷோர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News