உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் பெண்கள் கல்லூரி தொடங்க சட்டசபையில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ கோரிக்கை

Published On 2023-10-14 14:47 IST   |   Update On 2023-10-14 14:47:00 IST
  • கோவையில் தற்போது 6 அரசு, 7 அரசு உதவிபெறும், 58 சுயநிதி கலைஅறிவியல் கல்லூரிகள் உள்ளன
  • வடவள்ளியில் புதிதாக பெண்கள் கலைஅறிவியல் கல்லூரி அவசியல்லையென பொன்முடி தகவல்

கோவை,

தமிழக சட்டசபையில் கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் பேசும் போது, கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளியில் புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். இதற்கு அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்து உள்ள பதில் வருமாறு:-கோவை மாநகராட்சி பகுதியில் அமைந்து உள்ள வட வள்ளிக்கு உட்பட்ட கோவை மாவட்டத்தில் தற்போது 6 அரசு கலைஅறிவியல் கல்லூரி களும், 7 அரசு உதவிபெறும் கலைஅறிவியல் கல்லூரிகளும், 58 சுயநிதி கலைஅறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர ஒரு அரசு பொறியியல் கல்லூரி, 2 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 62 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், ஒரு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும், 3 அரசு தொழில்நுட்ப கல்லூரிகளும், 6 அரசு உதவிபெறும் தொழில்நுட்ப கல்லூரிகளும், 21 சுயநிதி தொழில்நுட்ப கல்லூரி களும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் இந்த தொகுதி மாணவ-மாணவிகளின் உயர்கல்வி க்கான தேவைகளை நிறைவு செய்வதால் வடவள்ளியில் புதிதாக ஒரு பெண்கள் கலைஅறிவியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Tags:    

Similar News