உள்ளூர் செய்திகள்

விழாவில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கவுரவித்தனர்.

அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2023-03-19 09:12 GMT   |   Update On 2023-03-19 09:12 GMT
  • ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்தனர்.
  • கல்லூரி கால நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டு நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்பராய அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.

பழைமை வாய்ந்த இக்கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு முதல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் வைர விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

1960-ம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் பணியாற்றி மற்றும் ஓய்வு பெற்ற நிலையில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி காலத்தில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செய்து கவுரவித்தனர்.

1993 ஆம் ஆண்டு கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்து அதனை திறந்துவைத்தனர்.

பலர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்பொழுது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நிகழ்வில் அனைவரும் இளைஞர்கள் போல் ஒருவருக்கொருவர் தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்ட துடன் தங்களது சக நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதில் முன்னாள் மாணவர்களாகிய விஸ்வநாதன், சேகர், கண்ணன், திருநாவுக்கரசு, சுப்ரமணியன், தில்லை நடராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News