உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

விழுப்புரத்தில் இன்று அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-20 07:46 GMT   |   Update On 2023-07-20 07:46 GMT
  • அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • கோவில் இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி வாழ்ந்தவர்களிடம் தகுதியான குத்தகை வரி வசூலிக்காமல் லட்ச கணக்கில் வசூலிக்கின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைசர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை காலம் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றி துரைமுருகன் கூறிய பாடலை சுட்டிக்காட்டி பேசினார். தற்போது தமிழகத்தில் நடைபெறும் காவல்துறை தமிழக ஏவல்துறையாக நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலத்தில் என்ன அடிப்படை திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள் என கூற முடியுமா? இந்து சமய அறநிலைத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு, வீட்டுவரி உயர்வு, பதிவுகட்டணம், கோவில் இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி வாழ்ந்தவர்களிடம் தகுதியான குத்தகை வரி வசூலிக்காமல் லட்ச கணக்கில் வசூலிக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, அனிதா ராதா கிருஷ்ணன், அனைவரும் கூடிய விரைவில் புழல் சிறைக்கு செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News